இலங்கை
பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம்; பரிந்துரைகள் இறுதிக்கட்டத்தில்!
பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம்; பரிந்துரைகள் இறுதிக்கட்டத்தில்!
நீதியமைச்சர் தெரிவிப்பு
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது என்று நீதித்துறை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு, இந்த பரிந்துரைகளை விரைவில் வழங்கவுள்ளது. இந்தப் பரிந்துரைகள் கிடைக்கும் தினத்தை இப்போதைக்குக் கூறமுடியாது என்றாலும், அவை மிக விரைவில் கிடைக்கும். நிகழ்நிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை நீக்குவது குறித்த காலக்கெடுவை இப்போதைக்குக் கூறமுடியாது. அதற்காக நியமிக்கப்பட்ட குழுவைச் சந்தித்து, அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டியுள்ளதே இதற்குக் காரணம் – என்றார்.