பொழுதுபோக்கு

பாட்டு நல்லாருக்கு, ஆனா இன்னும் பெட்டரா எதிர் வேணும்: ரஜினி பட டைரக்டர் பேச்சால் கடுப்பான இளையராஜா!

Published

on

பாட்டு நல்லாருக்கு, ஆனா இன்னும் பெட்டரா எதிர் வேணும்: ரஜினி பட டைரக்டர் பேச்சால் கடுப்பான இளையராஜா!

ரஜினிகாந்த் நடிப்பில வெளியான வீரா படத்திற்காக இளையராஜா கொடுத்த பாடலை பிடிக்காத இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணனா, உங்களிடம் நான் இதை விட பெட்டரா எதிர்பார்க்கிறேன் என்று நேருக்கு நேராக கூறியதால், இளையராஜா கடுப்பாகி இசையமைப்பாளரை மாற்றிவிடலாமா என்று யோசித்துள்ளார்.தமிழ் சினிமாவில், கமல்ஹாசனுக்கு சத்யா, ஆளவந்தான் ரஜினிக்கு அண்ணாலை, பாட்ஷா என வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் சுரேஷ் கிருஷ்ணா. 1992-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாமலை படத்தை இயக்கிய இவர், 1994-ம் ஆண்டு வீரா என்ற படத்தை இயக்கியிருந்தர். மீனா, ரோஜா இணைந்து நடித்த இந்த படத்தில் செந்தில், விசு, ஜனகராஜ், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார்.இந்த படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ஒரு பிராமண பெண் பாடுவது போன்ற ஒரு பாடல் காட்சி உள்ளது. இதற்காக ஒரு பாடலை கம்போஸிங் செய்த இளையராஜா இதை வீரா படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு கொடுத்து அனுப்பியுள்ளார். இந்த பாடலை கேட்ட சுரேஷ் கிருஷ்ணனா, பாடல் நல்லாருக்கு, ஆனால் நம்ம கதைக்கு செட் ஆகுற மாதிரி தெரியலையே என்று கூறியுள்ளார். இதே கருத்தை ரஜனிகாந்தும் சொல்ல, யூனிட்டில் இருந்த பலருக்கும் பாடல் பிடிக்கவில்லை.இதனைத் தொடர்ந்து ஷூட்டிங்கில் இருந்து கிளம்பி சென்னை வந்த சுரேஷ் கிருஷ்ணா இளையராஜாவிடம் சென்று பேச, அவர் பாடல் எப்படி என்று கேட்டுள்ளார். இவரோ உங்களிடம் இருந்து கிரேட் பாடலை எதிர்பார்த்தேன். இந்த பாடல் ஓகேவாக இருக்கிறது. எனக்கு சரியாக வருமா என்று தெரியவில்லை. யூனிட்டில் இருந்தவர்களும் அதைதத்தான் சொன்னார்கள் என்று சொல்ல, கடுப்பான இளையராஜா படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்திற்கு போன் செய்து உங்க இயக்குனருக்கு என் இசை பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.அதன்பிறகு, ரஜினிகாந்துக்கு போன் செய்து, உங்க இயக்குனருக்கு என் இசை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு போனை வைத்துள்ளார். இதை கேட்ட சுரேஷ் கிருஷ்ணனா நான் அப்படி சொல்ல வரல சார் என்று சொல்ல, நீ ஒன்றும் பேச வேண்டாம் போ என்று கூறியுள்ளார். வெளியில் வந்த சுரேஷ் கிருஷ்ணா, ரஜினிகாந்த், பஞ்சு அருணாச்சலம் இருவரிடமும் இதை பற்றி சொல்ல, அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் அங்கு வந்துள்ளனர். 2 மணி நேரம் கழித்து  சமாதானம் ஆன இளையராஜா அடுத்து ஒரு பாடலை கொடுத்துள்ளார்.அந்த பாடல் தான் மாடத்திலே கன்னி மாடத்திலே என்ற பாடல். இந்த பாடலை கேட்டு சுரேஷ் கிருஷ்ணாவுக்கு பிடித்து போக அவரிடம் சென்று சாரி கேட்டுள்ளார். ஆனால் இளையராஜா நீ உன் விருப்பதை சொல்லியிருந்தால் ஓகே, ஆனால் யூனிட்டில் இருந்தவர்கள் சொன்னார்கள் என்று சொன்னது தான் எனக்கு கோபம் வந்துவிட்டது பரவில்லை என்று கூறியுள்ளார்.இந்த தகவலை சுரேஷ் கிருஷ்ணாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version