சினிமா
பிக் பாஸில் ரொமான்ஸா.? திவாகருக்கு மிரர் முத்தம் கொடுத்த அரோரா! அடுத்த பஞ்சாயத்து ரெடி
பிக் பாஸில் ரொமான்ஸா.? திவாகருக்கு மிரர் முத்தம் கொடுத்த அரோரா! அடுத்த பஞ்சாயத்து ரெடி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி மவுசு உண்டு. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் எழுத்து சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். அதற்கு பின்பு எட்டாவது சீசனில் இருந்து விஜய் சேதுபதி களமிறங்கியுள்ளார். இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் கூடுதலானவர்கள் சோசியல் மீடியா பிரபலங்களாக காணப்படுகின்றனர். திறமையான பலர் வெளியே வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்க, திறமை இல்லாதவர்களை பிக் பாஸ் தேர்வு செய்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. எனினும் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், வெளியில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார்.. இவரை பலரும் கேலி கிண்டல் செய்தனர். ஆனால் தற்போது இவர் ஒருவருடைய உண்மையான முகம் அனைவருக்கும் பிடித்துள்ளது. பிக் பாஸில் இவருக்கே அதிக ஆதரவு பெருகி வருகின்றது. அதேபோல பலூன் அக்கா என அழைக்கப்படும் அரோராவும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளார். அவர் தற்போது தனது கவனத்தை துஷார் மீது திணித்துள்ளார். அவர்கள் இருவரும் செய்யும் காதல் லீலைகள் இணையத்தில் படு வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், திவாகருக்கு அரோரா கொடுத்த மிரர் முத்தம் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஏற்கனவே அரோரா- திவாகர் பற்றிய வீடியோக்கள், தகவல்களை ரசிகர்கள் ட்ரோல் பண்ணி வருகின்றார்கள். தற்போது ஆதிரைக்கு கண்ணாடியின் ஊடாக அரோரா முத்தம் கொடுக்கிறார். இதன் போது அங்கிருந்த திவாகர் எனக்குன்னு கேட்க, அவருக்கும் கண்ணாடி வழியாக முத்தம் கொடுக்கின்றார் அரோரா.ஏற்கனவே கடந்த சீசனில் காதல் புறாக்களாக பறந்த நிக்சனும் ஐஸ்வர்யாவும் கண்ணாடி வழியாக முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.