உலகம்
பிலிப்பைன்ஸ் கப்பலை இலக்குவைத்த சீனக்கடற்படை
பிலிப்பைன்ஸ் கப்பலை இலக்குவைத்த சீனக்கடற்படை
தென்சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பலை சீனக்கடற்படை தாக்கிச் சேதப்படுத்தியுள்ளது என்று பிலிப்பைன்ஸ் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சீனக் கப்பல்கள் வலுவான தண்ணீர்ப் பீரங்கியைப் பயன்படுத்தி பிலிப்பைன்ஸ் கப்பலைத் தாக்கியுள்ளன என்றும், அதில் கப்பல் சேதமடைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, இந்தச் சம்பவத்தால் கப்பலில் இருந்தவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.