இலங்கை
மோ.சைக்கிளால் வீழ்ந்தவரை ஏறி நசுக்கியது பேருந்து; கால்பந்தாட்ட வீரர் பரிதாபச் சாவு!
மோ.சைக்கிளால் வீழ்ந்தவரை ஏறி நசுக்கியது பேருந்து; கால்பந்தாட்ட வீரர் பரிதாபச் சாவு!
யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த எட்மன் மரின் (வயது-27) என்ற கால்பந்தாட்ட வீரரே உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-
சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மோட்டார்சைக்கிளில் பயணித்த அந்த இளைஞர் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்டபோது நிலைதடுமாறி வீழ்ந்துள்ளார். இதன்போது பின்னால் வந்த பேருந்து அவர் மீது ஏறியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பேருந்துக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்த ஓட்டோவொன்று, அந்த விபத்தைத் தவிர்ப்பதற்காக சடுதியாகத் திருப்பப்பட்டபோது, அது தடம்புரண்டு வயலுக்குள் பாய்ந்துள்ளது. எனினும், ஓட்டோவில் இருந்த எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.