இலங்கை

வவுனியா உணவகத்தில் அதிரடி சோதனை!

Published

on

வவுனியா உணவகத்தில் அதிரடி சோதனை!

 வவுனியா குருமன்காட்டு சந்தியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றையதினம் கொள்வனவு செய்யப்பட்ட கோழி இறைச்சியில் புளுக்கள் இருந்துள்ளமை தொடர்பாக வவுனியா மாநகரசபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் இன்று 14ஆம் திகதி திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதற்கமைய இன்றையதினம் காலை மாநகரசபையின் பிரதிமுதல்வர் ப.கார்த்தீபன், உறுப்பினர் சிறிஅருணன் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்ததுடன் அங்கிருந்த உணவங்கள் மீது திடீர் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 
இதன்போது உணவகம் ஒன்றில் சுகாதார சீர்கேடான முறையில், உண்பதற்கு ஒவ்வாத கோழி இறைச்சி மற்றும் உணவுப்பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து குறித்த உணவுப்பொருட்கள் சுகாதார பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அந்த உணவகம் மீது நீதிமன்றத்தில்  வழக்குதாக்கல் செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுப்பட்டது.    
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version