இலங்கை
ஹெரோய்னுடன் இளைஞர் கைது
ஹெரோய்னுடன் இளைஞர் கைது
ஹெரோய்னை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குருநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமையவே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேகநபர் 29 வயதுடையவர் என்றும், அவரிடம் இருந்து 5 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.