இலங்கை

100க்கும் அதிக மருந்துகள் நோயாளருக்கு எட்டாக்கனி

Published

on

100க்கும் அதிக மருந்துகள் நோயாளருக்கு எட்டாக்கனி

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது. பிரதான மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சைப் பொருள்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. 2026ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையின் மருந்துப் பற்றாக்குறை முற்றிலுமாகத் தீர்க்கப்படும் எனச் சுகாதார அமைச்சு பலமுறை உறுதியளித்திருந்தது. இந்தப்பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பல அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்பட்டபோதிலும், எவையும் வெற்றியளிக்கவில்லை என்று அந்தக் கூட்டணியின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version