பொழுதுபோக்கு
16 வயதில் உடல் மாற்றம், 17-ல் ஆப்ரேஷன்; பெயர் கொடுத்த நயன்தாரா: பிக்பாஸ் அப்சரா காதல் கதை!
16 வயதில் உடல் மாற்றம், 17-ல் ஆப்ரேஷன்; பெயர் கொடுத்த நயன்தாரா: பிக்பாஸ் அப்சரா காதல் கதை!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன், பல விமர்சனங்களை கடந்தும் வெற்றிகராமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து அவ்வப்போது சக போட்டியாளர்கள், மற்றும் டாஸ்க்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அப்சரா சி.ஜே. வாழ்க்கையில் நடந்த சோகம் குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. 8 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 9-வது சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. இதில் வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், விஜே.பார்வதி விக்கல்ஸ் விக்ரம் உட்பட 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒரு திருநங்கையும் இடம் பெற்றுள்ளார். அவர் தான் அப்சரா சி.ஜே. கேரளாவை சேர்ந்த இவர், மிஸ் சென்னை பட்டம் வென்றுள்ள நிலையில், 2021-ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியில் ரன்னராக வந்துள்ளார்.பள்ளியில் படிக்கும்போதே இவரின் நடை, உடை, பாவனைகளை பார்த்த பெற்றோர்கள் இவர் பெண் போல் இருக்கிறார் என்று கண்டித்துள்ளனர். ஆனாலும், இவரது சகோதரர் அவன் எப்படி வேண்மானாலும் இருக்கட்டும், அவனை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆதரவு அளித்துள்ளார். ஆனாலும் இவரை பள்ளியில் பலரும் கேலி, கிண்டல் செய்துள்ளனர். அதை பொருட்படுத்தாத அப்சரா, தனது படிப்பில் கவனம் செலுத்தி பள்ளி படிப்பை முடித்து கல்லுரியில் சேர்ந்துள்ளார்.முதலில் பி.எஸ்.சி பட்ட படிப்பை முடித்த அப்சரா, எம்.எஸ்.பி படிப்பில் பல்கலைகழகத்தில் 2-வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். அதன்பிறகு, கேரளாவில் ஒரு ட்ரெய்னிங் அகாடமியில் மேக்கப் பற்றி முறையாக பயிற்சி பெற்ற அப்சரா, தனது 16 வயதில் தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து ஆப்ரேஷன் செய்துகொள்ள நினைத்துள்ளார். ஆனால் எப்படி செய்வது என்ற பயமும் இருந்ததால், அதை பற்றி தெரிந்துகொள்ள முயற்சி செய்துள்ளர். ஒரு கட்டத்தில் ஆப்ரேஷன் பற்றி தெரிந்துகொண்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து தனது 17-வது வயதில் ஆப்ரேஷன் செய்துகொண்டு பெண்ணாக மாறிய இவர், தனது உண்மையான பெயரான கிச்சு சி.ஜே. என்பதை அப்சரா சி.ஜே. என்று மாற்றிக்கொண்டுள்ளார். மாயா படத்தில் வரும் நயன்தாராவின் பெயர் தான் அப்சரா. இதை பார்த்து தான் இந்த பெயரை வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. 11-ம் வகுப்பு படிக்கும்போது தனது வகுப்பு தோழன் ஒருவருடன் காதல் வயப்பட்ட அப்சரா, அவனுடன் பழகி வந்துள்ளார். அப்சராவை பற்றி அனைத்தும் தெரிந்தும் அந்த காதலன் அவருக்கு துணையாக இருந்துள்ளார்.ஒரு கட்டத்தில் ஆப்ரேஷன் செய்துகொண்ட அப்சரா, பெண்ணாக மாறியதும், நீ அழகாக இருக்கிறாய், உன்னை அனைவரும் பார்ப்பார்கள், வெளியில் யாருடனும் பேச கூடாது, பழக கூடாது என்று கட்டனை இட்டுள்ளார். இந்த டார்ச்சரை தாங்கிக்கொள்ள முடியாத அப்சரா அந்த உறவில் இருந்து வெளியேறியுள்ளார். தற்போது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது,