சினிமா

Performance ஒன்னுமே பண்ண முடியல.. ஆனா நான் தான் அங்க அறிவாளி! பிரவீன் காந்தி பேட்டி

Published

on

Performance ஒன்னுமே பண்ண முடியல.. ஆனா நான் தான் அங்க அறிவாளி! பிரவீன் காந்தி பேட்டி

பிக்பாஸ் சீசன் 9ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தனர். வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்களுடன் ஆரம்பித்திருக்கும் இந்த சீசன், ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளது. இந்த வார ஆரம்பத்திலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு நந்தினி வெளியேறியிருந்தார். அவர் சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட மோதல் மற்ற மற்றும் மன அழுத்தம் காரணமாக தாமாகவே முன்வந்து வெளியேறி இருந்தார். இதைத்தொடர்ந்து முதல் வாரத்திற்கான எலிமினேஷனில் குறைவான வாக்குகளை பெற்ற இயக்குநர் பிரவீன் காந்தி எலிமினேட் ஆனார்.  இதனால்  முதல் வாரத்திலேயே இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இயக்குநர் பிரவீன் காந்தி  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் கூறுகையில், பிக் பாஸ் வீட்டில் இவ்வளவு செய்தும் ஓட்டு போடவில்லை என்றால் அப்போ என்ன செய்யணும்.. ஒன்றுமே செய்யக்கூடாது.. அங்க போய் என்னால Performance ஒன்னுமே பண்ண முடியல..  இதைப்போல தான் எல்லா போட்டியாளர்களும் நினைத்திருப்பார்கள்..  எல்லாரும் சிரிக்கிறாங்க..  ஆனா என்ன இப்படி ஒரு முட்டாளா வளர்த்து வச்சிருக்காங்க…  ஆனா நாம தான் இருக்கிறதுலையே அறிவாளி என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version