வணிகம்
PM Kisan: தீபாவளிக்கு முன்பாக உங்க வங்கிக் கணக்கில் ரூ2000; செக் பண்ணுங்க மக்களே!
PM Kisan: தீபாவளிக்கு முன்பாக உங்க வங்கிக் கணக்கில் ரூ2000; செக் பண்ணுங்க மக்களே!
பி.எம் கிசான் திட்டம் என்பது நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நிதித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு ரூ.2000 என ஒரு ஆண்டில் 3 தவணைகளில் விடுவிக்கப்படுகின்றன. பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் (பி.எம் கிசான் ) 21-வது தவணை எப்போது செலுத்தப்படும் என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில், தீபாவளிக்கு முன்னதாக வந்தால் உதவியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய அரசு ஏற்கனவே சில விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு முன்பணமாக மத்திய அரசு திட்டத் தொகையை மாற்றியுள்ளது. இதற்கு காரணம், இந்த மாநிலங்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பிற கடுமையான இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு முன்கூட்டியே பி.எம் கிசா நிதியை விடுவித்தது.அதே நேரத்தில், மற்ற மாநிலக்களுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணைக்கான நிதி எப்போது விடுவிக்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தேதியை மத்திய அரசு அறிவிக்கவில்லை. இந்நிலையில், பி.எம் கிசான் திட்டத்தின் கீழ், இந்தத் தவணைக்கான ரூ.2,000 தீபாவளி பண்டிகைக்கு, அதாவது அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்னதாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால், கடந்த ஆண்டு, பி.எம் கிசான் திட்டத்தின் 18-வது தவணை அக்டோபர் 5-ம் தேதியும், 15-வது தவணை நவம்பர் 15-ம் தேதியும் வெளியிடப்பட்டது. அதனால், பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் ரூ.2,000 தீபாவளி பண்டிக்கைக்கு முன்னர் செலுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால், உங்கள் வங்கிக் கணக்கை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.