சினிமா

அடேங்கப்பா.! நீதா அம்பானியின் கைப்பை இத்தனை கோடியா.? ஷாக்கில் ரசிகர்கள்.!

Published

on

அடேங்கப்பா.! நீதா அம்பானியின் கைப்பை இத்தனை கோடியா.? ஷாக்கில் ரசிகர்கள்.!

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியும், ரிலையன்ஸ் நிறுவனத்தின்  தலைவியுமான நீதா அம்பானி, சமீபத்தில் நடைபெற்ற தீபாவளி விருந்தில் தனது ஆடையாலும், கையில் வைத்திருந்த பையினாலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.இந்த விழாவுக்கு நீதா அம்பானி தேர்ந்தெடுத்திருந்த ஆடையும், கைப்பையும் பற்றி சமூக வலைத்தளங்களில் தற்பொழுது பரபரப்பாகப் பேசப்படுகிறது. குறிப்பாக, அவர் வைத்திருந்த ஹெர்ம்ஸ் பிர்கின் (Hermès Birkin) கைப்பை, அதன் விலை, மற்றும் அதில் பதிக்கப்பட்டுள்ள வைரக் கற்கள் எல்லாம் இந்திய சந்தையில் பெரும் விவாதத்துக்கு காரணமாகி வருகிறது.நீதா அம்பானியின் கையில் இருந்த அந்த ஹெர்ம்ஸ் பிர்கின் கைப்பை ஒரு சாதாரண ஃபேஷன் கைப்பை அல்ல. அது உலகில் மிகவும் பிரமாண்டமான, அரிய மற்றும் விலையுயர்ந்த கைப்பைகளில் ஒன்றாகும்.இந்த ஹெர்ம்ஸ் பை 3,025 வைரக்கற்கள் பதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வைரமும் சரியான கட்டமைப்பில் பளிச்சென்று ஒளிரும் வகையில் பதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வெள்ளியில் (white gold) பதிக்கப்பட்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.இந்த பையின் மதிப்பு இந்திய சந்தையில் சுமார் 17 கோடியே 73 லட்சத்து 24 ஆயிரத்து 200 ஆகிறது. உலகளவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்படும் இவற்றினை பிரமுகர்களும், ராயல் குடும்பத்தினரும் மட்டுமே வைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version