சினிமா
அமிதாப் பச்சனையே திணறடித்த 10 வயது சிறுவன்!! நெட்டிசன்கள் கடும் விமர்சனம்…
அமிதாப் பச்சனையே திணறடித்த 10 வயது சிறுவன்!! நெட்டிசன்கள் கடும் விமர்சனம்…
பாலிவுட்டில் மூத்த நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அமிதாப் பச்சன், தற்போது கெளன் பனேகா குரோர்பதி என்ற வினாடி – வினா நிகழ்ச்சியின் 17வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.10 வயதுக்கு உட்பட சிறுவர் சிறுமிகள் பங்கேற்று வரும் இந்நிகழ்ச்சியின் சமீபத்தில் குஜராத்தை சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவன், இஷித் பட் இணையவாசிகளால் மிகவும் வெறுக்கபப்ட்ட சிறுவன் என்ற அடையாள பட்டத்தை பெற்றுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இந்த வயதில் சிறுவன் வெளிப்பத்திய தன்னம்பிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், அவனது அணுகுமுறை, துடுக்கான பதில்கள் பார்வையாளர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியுள்ளது.தனக்கு முன் ஜாம்பவான் அமர்ந்திருப்பதை நினைக்காமல் சிறிதும் மரியாதை கட்டாமல், தன் வயதுக்கு மீறி திமிரோடு அவன் நடந்து கொண்டதையும் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.சிறுவன் பட அமிதாப் பச்சன் கேள்விக்கு பதிலளித்த விதத்தில் தனித்துவம் தெரிந்தாலும், கேள்விகளுக்கு வேகமாக பதிலளிக்க அவர் காட்டிய அவசரம் பார்வையாளர்களை சங்கடபடுத்தியிருக்கிறது.ஒருக்கட்டத்தில், அமிதாப் பச்சனிடம் நிகழ்சியின் விதிகளை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டாம் என்று சிறுவன் வலியுறுத்தியும் தொகுப்பாளருடன் அதிக உரையாடல் இல்லாமல், திரையில் கேள்விகளை காட்டச்சொல்லி சிறுவன் கூறிய அணுகுமுறை, அவருக்கு எதிரான எதிர்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.அதேசமயம், மரியாதை இல்லாமல் நடந்து கொண்ட இந்த சிறுவனை சமாளிக்கும்போது அமிதாப் பச்சன் வெளிப்படுத்திய பொறுமையும் புன்னகையும் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.