இந்தியா

இந்தியாவில் பஸ் தீ விபத்து – 20 பேர் பலி!

Published

on

இந்தியாவில் பஸ் தீ விபத்து – 20 பேர் பலி!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பஸ் ஒன்று தீப்பிடித்ததில் 20 பேர் சம்பவ இடத்திலே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஜெய் சால்மர் நகருக்கு சொகுசு பஸ்  ஒன்று சென்றுகொண்டிருந்தது. ஜோத்பூர் – ஜெய் சால்மர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சொகுசு பஸ் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.  57 பயணிகள் பயணித்துள்ள நிலையில் இந்த சம்பவத்தில்  20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி  இது தொடர்பாக  எக்ஸ் பதிவில், ஜோத்பூரில் நடைபெற்ற பஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என்றும்  தெரிவித்துள்ளார்.

மேலும், பஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய மதிப்பில் தலா 2 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version