உலகம்

இன்ஸ்டாகிராமில் புதிய வழிமுறை: 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கட்டுப்பாடு

Published

on

இன்ஸ்டாகிராமில் புதிய வழிமுறை: 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கட்டுப்பாடு

18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் அதில் அபாயகரமான மோசமான உள்ளடக்கங்களை அவர்கள் பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 இதனால் மெட்டா நிறுவனம், 18 வயதுக்குக் குறைவானவர்களால் பாலியல் உள்ளடக்கிய காட்சிகள், போதைப் பொருள், அபாயகரமான சண்டைக் காட்சிகள் அல்லாத காணொளிகளைப் பார்க்க வழிவகை செய்துள்ளது. 

Advertisement

 இந்த வசதிகளைப் பெற்றோர்களின் அனுமதியின்றி மாற்ற முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

திரைப்படங்களுக்கு PG-13 ரேட்டிங் இருப்பது போல், இன்ஸ்டாகிராமிலும் புதிய நடைமுறையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

 இந்த கட்டுப்பாடுகளை விரும்பும் பெற்றோருக்கு, இன்ஸ்டாகிராமில் Limited Content என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. 

Advertisement

 சிறுவர்கள் தங்களை 18 வயதுக்கு மேற்பட்டோர் எனக் கூறினாலும் அதனைக் கண்டறிய அதற்கான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.

 அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் விரைவில் இந்த நடைமுறை அறிமுகமாகியுள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version