பொழுதுபோக்கு

களைகட்ட போகும் இந்த வருச தீபாவளி… உங்களை குஷிப்படுத்த காத்திருக்கும் ஓ.டி.டி, தியேட்டர் ரிலீஸ்; பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

Published

on

களைகட்ட போகும் இந்த வருச தீபாவளி… உங்களை குஷிப்படுத்த காத்திருக்கும் ஓ.டி.டி, தியேட்டர் ரிலீஸ்; பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று வெள்ளித் திரையில் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸுக்கு வரிசைக் கட்டி நிற்கும். அந்த வகையில் இந்த ஆண்டு பல இளம் நடிகர்களின் படங்கள் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. இந்த வருட தீபாவளி ரேஸில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தீபாவளிக்கு தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-களில் ரிலீஸாகவுள்ள படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.டீசல்இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள திரைப்படம் ‘டீசல்’.  இந்த படத்தில் அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின கதேகர், ஜாகிர் உசேன், தங்கதுரை, மாறன், கே.பி.ஒய் தீனா, அபூர்வா சிங் ஆகியோர் நடித்துள்ளனர். வினய் இந்த படத்தில் வில்லனாக காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப்பட்ட ’டீசல்’ திரைப்படம் தீபாவளி பண்டியை முன்னிட்டு வரும் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.டியூட்கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம்  ‘டியூட்’.  மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள  இந்த படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தீபாவளி ரேஸில் இடம் பெற்றுள்ள ‘டியூட்’ திரைப்படம் வரும் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.பைசன்இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 17-ந் தேதி தீபாவளி  வெளியாக உள்ளது. கம்பி கட்டுன கதைமங்காத்தா மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்ராஜ் (நட்டி), சிங்கம்புலி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கம்பி கட்ன கதை’. ஒரு ஜாலியான ரோலர் கோஸ்டர் படமாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம் வரும் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. திரையரங்குகள் மட்டுமல்லாமல் ஓ.டி.டி தளங்களிலும் தீபாவளியை முன்னிட்டு பல்வேறு படங்கள் ரிலீஸாக உள்ளது. இந்த தீபாவளி ரேஸில் யார் வெல்லப் போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version