இலங்கை
காணிஉரிமை வழங்கப்பட வேண்டும்; பா.சிவநேசன் வலியுறுத்தல்!
காணிஉரிமை வழங்கப்பட வேண்டும்; பா.சிவநேசன் வலியுறுத்தல்!
‘உரிமை மீட்போம், தலைமுறை காப்போம்’ என்ற அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் பா. சிவநேசன் உட்பட பல சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்ததுடன், மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட காணியை பெறுவதற்கு தகுதி உடைய அனைவருக்கும் காணி உரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அட்டன் பஸ் நிலைய வளாகத்தில் கையெழுத்து திரட்டப்பட்டது.
பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு நிலம் மற்றும் வீடுகளை வழங்குவது மிகவும் அத்திய அவசியமானது. இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரமும் முன்னேறும் என்றும் கையெழுத்து திரட்டப்பட்ட மனு ஜனாதபதியிடம் கையளிக்கப்படும் என அமைப்பின் தலைவர் பா. சிவநேசன் மேலும் தெரிவித்தார்.