இலங்கை

சஷீந்திர ராஜபக்ஷ பிணையில் விடுவிப்பு!

Published

on

சஷீந்திர ராஜபக்ஷ பிணையில் விடுவிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சரான  சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று 14ஆம் திகதி உத்தரவிட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி நடந்த போராட்டத்தின் போது, ​​சஷீந்திர ராஜபக்ஷவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான, கிரிஇப்பன்வெவ, செவனகலவில் உள்ள காணியொன்றில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம் உள்ளிட்ட சொத்துக்கள் சேதமடைந்தன.

Advertisement

அந்த சொத்துக்கான இழப்பீடு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீறி இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் சில அதிகாரிகளுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்து இழப்பீட்டை செலுத்துமாறு பலவந்தப்படுத்தியுள்ளதாக  அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதன்போது 8,850,000 இலட்சம் இழப்பீடாக பெற்றதன் ஊடாக ஊழல் என்ற குற்றத்தை செய்தமை மற்றும் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பிலும் பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இன்று 14ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version