சினிமா

சீ..சீ.. இது ரொம்ப ஓவராச்சே.!! துஷார் பற்றிய ரகசியத்தை அம்பலமாக்கிய அரோரா

Published

on

சீ..சீ.. இது ரொம்ப ஓவராச்சே.!! துஷார் பற்றிய ரகசியத்தை அம்பலமாக்கிய அரோரா

பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பித்ததில் இருந்து  படு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது. இந்த சீசன் நாளுக்கு நாள் மிகவும் மோசமாக போய்க் கொண்டுள்ளது.  இதனால் போட்டியாளர்களும் ரசிகர்களும் மிகவும் அதிருப்தியில் காணப்படுகின்றார்கள். இந்த சீசன் ஆரம்பிக்கப்பட்ட போது இதில் திவாகர், கலையரசன், அரோரா,  ரம்யா ஜோ  போன்ற பிரபலங்கள் பிக் பாஸ்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக காணப்பட்டது.  ஆனாலும் நாளடைவில் திவாகர் மீது உள்ள நெகட்டிவ் விமர்சனங்கள் குறைந்து, அவருக்கு  மக்களின் ஆதரவு அதிகரித்தது. எனினும்  பிக் பாஸ்க்கு எதற்கு வந்தோம் என தெரியாத அளவிற்கு ஆதிரை, அரோரா போன்றவர்கள்  லவ் ட்ராக்கில் செல்வது பார்வையாளர்களை  சலிப்படையச் செய்துள்ளது.  ஏற்கனவே  ஆதிரை எப். ஜே உடன் ஓரங்கட்டி ரொமான்ஸ் பண்ணுவதும்,   அரோரா  துஷார் மீது  துள்ளிக்குதித்து முத்தம் கொடுத்து  கொஞ்சி விளையாடுவதும் பார்ப்போரை  வெறுப்படைய செய்துள்ளது. இந்த நிலையில், துஷார் பற்றிய  ரகசியம் ஒன்றை அரோரா அம்பலமாகியுள்ளார்.  அதாவது பிக் பாஸ் வீட்டில் அரோரா ஆதிரையிடம் பேசும் போது, ‘துஷார்  உள்ளே வந்து மூன்றாவது நாளே நாம வெளியே சென்ற பிறகு டேட்டிங் போலாமா என்று கேட்டார்’ எனக் கூறியுள்ளார்; இந்த தகவல் வைரலாகி வருவதோடு  அரோராவும் துஷாரும் நெருக்கம் காட்டுவது எங்க போய் முடிய போகுதோ என்று  ரசிகர்கள்  தாறுமாறாக கமெண்ட் பண்ணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version