பொழுதுபோக்கு
டேய் புளிப்பு போடா அப்டி… பிக்பாஸ் வீட்டார் இடையே வெடித்த மோதல்; நடந்தது என்ன?
டேய் புளிப்பு போடா அப்டி… பிக்பாஸ் வீட்டார் இடையே வெடித்த மோதல்; நடந்தது என்ன?
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் வாரத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சி காரசார விவாதங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகளும் வெடித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நந்தினி சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் என்னால் இருக்க முடியாது என்று வெளியேறினார்.இதைத்தொடர்ந்து, முதல் வார நாமினேஷனில் பிரவீன் காந்தி வெளியேறினார். எதற்கெடுத்தாலும் பிரச்சனை தான் தீர்வு என்ற கோணத்தில் பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்கள் செயல்பட்டு வருவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரையை போட்டியாளர்கள் குறித்து வைத்து தாக்குவதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளது.பல பிரச்சனைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த திவாகருக்கு ஒரு வாரத்திற்கு பிறகு ஃபாலோவர்ஸ்கள் அதிகரித்ததாக கூறப்படுகிறது. மேலும், வி.ஜே.பார்வதிக்கு ஹேட்டர்ஸ்கள் அதிகரித்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனைகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க மறு புறம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் இது சமூக சீரழிவிற்கு வழி வகுக்கிறது என்றும் கருத்துக்கள் பரவி வருகிறது.இருந்தாலும், பிக்பாஸிற்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இப்படி பல பிரச்சனைகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கான வீடியோவும் ஒவ்வொரு நாளும் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் தற்போது 10-வது நாளின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், வீட்டு கார்டன் ஏரியாவில் இருக்கும் ஸ்லாட்டில் தங்கள் உருவம் பொறித்த போட்டோவை போட்டியாளர்கள் வைக்க வேண்டும். #Day10#Promo1 of #BiggBossTamilBigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/LoVCI4uFE1அப்படி வைக்க தவறியவர்கள் போட்டியில் இருந்து வெளியேறுவார்கள் என்று அறிவிப்பு வந்தது. தொடர்ந்து, பசர் அடித்ததும் போட்டியாளர்கள் ஸ்லாட்டில் தங்கள் புகைப்படங்களை வைக்க ஓடுகிறார்கள். அப்போது வினோத்திற்கும் மற்ற குழுக்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. அப்போது வினோத் ‘டேய் புளிப்பு போடா அப்டி’ என்று கூறுகிறார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.