தொழில்நுட்பம்
தங்கம் முதல் டுவீலர் வரை; பண்டிகை தள்ளுபடிகளை அள்ளி வீசிய அமேசான்!
தங்கம் முதல் டுவீலர் வரை; பண்டிகை தள்ளுபடிகளை அள்ளி வீசிய அமேசான்!
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இ-காமர்ஸ் தளங்களான அமேசான் இந்தியா, தனது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2025-ன் ஒரு பகுதியாக, சிறப்பு தன்தேரஸ் மற்றும் தீபாவளி பண்டிகைத் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்தச் சிறப்புச் சலுகைகள் ஸ்மார்ட்போன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ், இருசக்கர வாகனங்கள் மற்றும் பல வகைகளில் கிடைக்கின்றன.இதன் மூலம், அமேசான் தனது தன்தேரஸ் விற்பனைப் பொருட்களை தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் முதல் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரங்கள் மற்றும் சிறந்த நகைகள் வரை விரிவுபடுத்துகிறது. டெல்லி என்.சி.ஆர்., மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உட்பட முக்கிய நகரங்களில் இந்தத் தயாரிப்புகள் தீபாவளிக்கு முன்னரே டெலிவரி செய்யப்படுவதை நிறுவனம் உறுதி செய்கிறது.தங்கம், வெள்ளி மற்றும் வைரங்களுக்கான பிரத்யேக சலுகைகள்பண்டிகைக் காலங்களில் நகைகள் மிக விரும்பப்படும் பிரிவாகத் தொடர்ந்து இருப்பதால், அமேசான்.இன் இப்போது 5 லட்சத்துக்கும் அதிகமான நகைத் தேர்வுகளையும், பி.என். காட்கில் (PN Gadgil), காரட்லேன் (Caratlane), ஜோயாலுக்காஸ் (Joyalukkas), பி.சி. சந்திரா (PC Chandra), மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் (Malabar Gold & Diamonds) போன்ற பிராண்டுகளின் 50,000-க்கும் மேற்பட்ட ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைர (Lab-Grown Diamond) வகைகளை ரூ.1,699-இல் இருந்தும் வழங்குகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவாடிக்கையாளர்கள் 1 கிராம் முதல் 10 கிராம் வரையிலான ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வாங்கலாம். இது தவிர, இந்தத் தளத்தில் நகைகளுக்கு 20% வரை தள்ளுபடி, உடனடி வங்கித் தள்ளுபடியாக 10% மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவமைப்புகளுக்கு ரூ. 1,000 கூப்பன்களும் வழங்கப்படுகின்றன.தங்க நகைகள் விற்பனையை பொறுத்தவரை, முன்னணி நகைக்கடைக்காரர்களின் ஹால்மார்க் செய்யப்பட்ட நகை காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு விற்பனையில் 96% அதிகரிப்பை நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 14K மற்றும் 18K தூய்மை கொண்ட நகைகளுக்கான தேவையும் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக 14K தங்கம் 50% ஆண்டு வளர்ச்சி கண்டுள்ளதாகவும், அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற எடைகுறைந்த மற்றும் நவீன நகைகளை வாடிக்கையாளர்கள் விரும்புவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.பரிசளிப்புக்கு அமேசான் பே (Amazon Pay)இந்த பண்டிகைக் காலத்தில் பரிசளிப்பை எளிதாக்க, அமேசான் பே (Amazon Pay) தனீஷ்க், கல்யாண், மலபார், ஜோயாலுக்காஸ் மற்றும் GIVA உள்ளிட்ட முன்னணி நகைக்கடைக்காரர்களிடமிருந்து பிரத்யேக இ-பரிசு கார்டுகள் (e-gift cards) வெளியிட்டுள்ளது. இதில் GIVA வெள்ளி நகைகள் 12% வரை தள்ளுபடி, கல்யாண் வைரம் மற்றும் தங்கத் துண்டுகளுக்கு 5% தள்ளுபடி மற்றும் பிற முக்கிய பிராண்டுகளுக்கு 2–3% வரை தள்ளுபடி கிடைக்கிறது.ஹெச்.டி.எஃப்.சி. வங்கி (HDFC Bank) கிரெடிட் அல்லது ஈஸி ஈ.எம்.ஐ. (Easy EMI) கார்டுகளைப் பயன்படுத்தும் பிரைம் உறுப்பினர்கள் கூடுதலாக 10% உடனடித் தள்ளுபடியைப் பெறலாம். அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு வாங்குதலின் மீது 5% கேஷ் பேக் மற்றும் கூப்பன் கார்டுக்கு வாங்குதல்களுக்கு 2% கூடுதல் கேஷ்பேக் கிடைக்கிறது. ஒரு கடைக்குச் செல்லாமல் பண்டிகைக் கால ஆபரை பாதுகாப்பான மற்றும் வசதியான வழியை வழங்கும் வகையில், அமேசான் பே மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யவும் இந்தத் தளம் அனுமதிக்கிறது.பஜாஜ் மற்றும் ஹீரோ நிறுவனங்களின் இருசக்கர வாகனங்கள் அக்.14 நள்ளிரவுக்குள் தீபாவளிக்கு முன் டெலிவரி செய்யப்படுவதை உறுதி செய்கிறது. கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் ஒரு பகுதியாக, ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டிவிகள், ஃபேஷன், பர்னிச்சர் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பிற வகைகளிலும் இந்தத் தளம் தொடர்ந்து பெரிய தள்ளுபடிகளை வழங்குகிறது.