இந்தியா

புதுச்சேரி மக்களுக்கு தீபாவளிப் பரிசு: ரூ.585 மதிப்புள்ள இலவச தொகுப்பை அறிவித்தார் அமைச்சர்

Published

on

புதுச்சேரி மக்களுக்கு தீபாவளிப் பரிசு: ரூ.585 மதிப்புள்ள இலவச தொகுப்பை அறிவித்தார் அமைச்சர்

புதுச்சேரியில், தகுதியுடைய அனைத்து வகைக் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 585 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு வழங்கப்படும் என அமைச்சர் திருமுருகன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.கடந்த 2024-ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது, தகுதியுடைய அனைத்து உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் இலவசமாக 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை (சீனி) ஆகியவை தீபாவளித் தொகுப்பாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு, புதுச்சேரி முதல்வரின் உத்தரவின்படி, தகுதியான அனைத்து வகைக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் உணவுப் பொருட்கள் தீபாவளித் தொகுப்பாக வழங்க அதிகாரப்பூர்வ உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது:சர்க்கரை (சீனி): 2 கிலோசூரியகாந்தி எண்ணெய்: 2 கிலோகடலைப்பருப்பு: 1 கிலோரவை: 1/2 கிலோ (அரை கிலோ)மைதா: 1/2 கிலோ (அரை கிலோ)இந்தத் திட்டத்தின் கீழ், அரசு உணவுப் பங்கீட்டு அட்டை ஒன்றுக்குத் தலா ரூபாய் 585 வீதம் செலவிடப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மொத்த 3,45,974 குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவர். புதுச்சேரியில் 2 ஆயிரத்து 62 ஆயிரத்து 313 பேரும், காரைக்காலில் 60 ஆயிரத்து 221 பேரும், மாஹேவில் 7 ஆயிரத்து 980 பேரும், ஏனாமில் 15 ஆயிரத்து 460 பேரும் என மொத்தம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 974 பேர் பயனடைவர்.தீபாவளி பண்டிகைக்கு முன்பே மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்குச் சென்றடையும் வகையில், ஏற்பாடுகள் துரிதமாகச் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக முதலமைச்சர் மற்றும் துணை நிலை ஆளுநர் ஆகியோருக்கு அவர் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version