இந்தியா
புதுச்சேரி மீனவர்களின் படகுகளை விடுவிக்க கோரிக்கை – நடவடிக்கை எடுப்பதாக நாரா லோகேஷ் உறுதி
புதுச்சேரி மீனவர்களின் படகுகளை விடுவிக்க கோரிக்கை – நடவடிக்கை எடுப்பதாக நாரா லோகேஷ் உறுதி
ஆந்திராவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது புதுச்சேரி மீனவர்களின் 4 படகுகளை ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்தனர். மேலும் மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்ககோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு , புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதி இருந்தார்.இந்நிலையில் புதுச்சேரிக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று விஜயவாடாவில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் அமைச்சர் நாரா லோகேஷை சந்தித்து பேசினார். சந்திப்பின்போது ஆந்திராவில் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள புதுச்சேரி மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்ககோரியும் இதேபோல் ஏனாமில் உள்ள தீவு 5-ல் உள்ள ஓ.என்.ஜி.சி குழாய் வெடித்து பாதிப்பு ஏற்பட்ட மீனவர்கள் , பொதுமக்களுக்கும் நிவாரணம் வழங்கவும் கோரிக்கை வைத்தார். கோரிக்கைகள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் நாரா லோகேஷ் உறுதி அளித்துள்ளார்.