உலகம்

பொது இடத்தில் 8 பாலஸ்தீனர்களை சுட்டுக்கொன்ற ஹமாஸ்

Published

on

பொது இடத்தில் 8 பாலஸ்தீனர்களை சுட்டுக்கொன்ற ஹமாஸ்

இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்க அதி பர் டிரம்ப் மற்றும் கத்தார், எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்த்தால் ஏற்பட்டு உள்ளது.

ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் ஹமாஸ் அமைப் பினர் தங்கள் வசம் இருந்த 20 இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்தனர். மேலும் உயிரிழந்த 4 பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்தனர்.

Advertisement

இதற்கு ஈடாக 1968 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது. ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் பிணைக் கைதிகளின் உடல்கள் உள்ளன.

இதையடுத்து மேலும் 4 பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்தனர். இன்னும் அவர்களிடம் 20 பிணைக்கைதிகளின் உடல்கள் உள்ளன.

இதைதொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினருக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். அவர்கள் ஆயுதங்களை களையவில்லை என்றால், நாங்கள் அவர்களை நிராயுதபாணியாக்குவோம். அது விரைவாகவும் வன்முறையாகவும் நடக்கும்.

Advertisement

ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட வேண்டும். இதுபற்றி ஹமாசுக்கு தகவல் அனுப்பப் பட்டுள்ளது. அவர்களிடம் உள்ள பிணைக்கைதிகளின் உடல்களை உடனடியாக ஒப் படைக்க வேண்டும். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2ம் கட்டம் தொடங்குகிறது” என்றார்.

இந்த நிலையில் காசாவில் 6 பாலஸ்தீனியர்களை ஹமாஸ் அமைப்பினர் பொதுவெளியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். தங்களுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டி 6 பேரையும் கொன்றுள்ளனர்.

அவர்களை சுட்டு கொல்லும் வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. இதற்கிடையே 30க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement

ஆயுதங்களை கைவிட டிரம்ப் எச்சரித்த நிலையில், பொதுவெளியில் 6 பேரை ஹமாஸ் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version