சினிமா
மகாபாரதத்தில் கர்ணனாக அழியாத பெயரை பெற்ற பங்கஜ் தீர் காலமானார்.!
மகாபாரதத்தில் கர்ணனாக அழியாத பெயரை பெற்ற பங்கஜ் தீர் காலமானார்.!
இந்திய தொலைக்காட்சி மற்றும் திரைப்பட உலகின் பிரபல நடிகரான பங்கஜ் தீர் (Pankaj Dheer) அவர்கள், 68வது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இன்று காலை மரணம் அடைந்தார் என்ற செய்தி சினிமா ரசிகர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பங்கஜ் தீர் எனும் பெயர் நினைவுக்கு வந்தவுடனே, ஒவ்வொருவருக்கும் முன் தோன்றுவது “மகாபாரதம்” தொடரில் அவர் நடித்த ‘கர்ணன்’ கதாபாத்திரம் தான். பி.ஆர். சோப்ரா இயக்கிய மகாபாரதம் தொடர், இந்திய டிவி வரலாற்றில் மிக முக்கியமானதாகும்.பங்கஜ் தீர் நடித்த கர்ணன் கதாபாத்திரம், நேர்மை, உண்மையின் பக்கம் நிற்கும் தன்னம்பிக்கையான மனிதன் என அனைத்து தலைமுறையினரிடமும் பிரமிப்பை ஏற்படுத்தியது. கர்ணனின் அவமானங்களும், தியாகங்களும், மதிப்புக்குரிய உறவுகளுக்காக பட்ட வேதனைகளும் பங்கஜ் தீர் நடித்ததன் வழியாக தான் அதிகமாக உணரப்பட்டன.