பொழுதுபோக்கு

‘மாரி செல்வராஜ் எடுத்தப் படங்களிலேயே இதுதான் பெஸ்ட்’… பைசன் படம் விமர்சனம்; முதல் ஆளாக பகிர்ந்த பிரபல இயக்குனர்

Published

on

‘மாரி செல்வராஜ் எடுத்தப் படங்களிலேயே இதுதான் பெஸ்ட்’… பைசன் படம் விமர்சனம்; முதல் ஆளாக பகிர்ந்த பிரபல இயக்குனர்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ என பல வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். தற்போது ‘பைசன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டின் மிகச் சிறந்த கபடி வீரர் மனத்தி கணேசன் வாழ்க்கையைத் தழுவி ’பைசன்’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்பம் வரும் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முன்னோட்ட விழாவில், ’பைசன்’ திரைப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்தது மனத்தி கணேசன் தான். என்னுடைய ஹீரோவாக இருந்த இவரைத்தான் சிறுவயதில் இருந்து பார்த்து வளர்ந்தேன். கபடி விளையாட்டுக்காக, இவருக்காக சிறுவயதில் நான் போஸ்டர் ஒட்டியிருக்கிறேன்.அவரின் கதையை வைத்து படம் எடுக்கப்போகிறேன் என அனுமதி கேட்டதும், என்னை நம்பி எனக்கு ஒத்துழைப்பை கொடுத்தார் கணேசன். நேர்மையான உழைப்புடன் பல போராட்டங்களைத் தாண்டி முன்னேறி வந்த இளைஞர்களின் கதையை எனது அரசியல் பார்வையில் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். இப்போது நான் திருநெல்வேலிக்கு செல்ல வேண்டும் என்றால் எனது மனதில் ஒரு பாரம் வரும். நண்பர்களுடன் பேசும்போது அங்கிருந்து வரும் செய்திகள் பதற்றத்தைத் தருகிறது.இதனை மாற்ற வேண்டும் என்றும், கருத்துரையாடலை முன்னெடுக்க வேண்டும் என்றும் விரும்பி திருநெல்வேலியில் நிகழும் சூழலை இப்பொழுது உள்ள இளைஞர்களிடம் கடத்த இந்தக் கதையை எழுதியிருக்கிறேன்” என்று மாரி செல்வராஜ் கூறியிருந்தார். இந்நிலையில், ’பைசன்’ திரைப்படத்தை பார்த்த இயக்குநர் ராம், ”மாரி செல்வராஜ் எடுத்தப் படங்களிலேயே இதுதான் பெஸ்ட்” என்று தனது விமர்சனத்தைச் சொல்லி பாராட்டியுள்ளார். இதேபோன்று படத்தை பார்த்த பா.இரஞ்சித்தும், மனத்தி கணேசனும் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளானர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version