இலங்கை
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாகவே அவர் கைதாகியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று வாக்குமூலம் வழங்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்குமாறு மனுஷ நாணயக்கார சமர்ப்பித்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.