உலகம்
ஸ்டார்ஷிப் ரொக்கெட்11ஆவது முறையாக வெற்றி!
ஸ்டார்ஷிப் ரொக்கெட்11ஆவது முறையாக வெற்றி!
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான ஸ்டார்ஷிப் ரொக்கெட், 11-ஆவது முறையாக அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்பேஸ் ஏவுதளத்திலிருந்து குறித்த ரொக்கெட் விண்ணில் ஏவி சோதிக்கப்பட்ட நிலையில், அது தனது பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
விண்ணில் ஏவப்பட்ட ரொக்கெட், பூமியை வெற்றிகரமாகச் சுற்றி வந்தது. அதன் பின்னர், முந்தைய சோதனைகளைப் போலவே, போலியான செயற்கைக்கோள்களைவிண்ணில் செலுத்தியது. இறுதியாக, ரொக்கெட் மீண்டும் பூமிக்குத் திரும்பி, ஏவுதளத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
123 மீற்றர் உயரம் கொண்ட இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட், உலகின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த ரொக்கெட்டாகக் கருதப்படுகிறது. இந்த ரொக்கெட் சோதனையின் வெற்றி, விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த ரொக்கெட் மூலமாகவே, இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.