இந்தியா

அரசு பள்ளிகளுக்கு 7 நாள் தீபாவளி லீவ்… ஆனா அது தமிழ்நாட்டில் இல்லை மக்களே!

Published

on

அரசு பள்ளிகளுக்கு 7 நாள் தீபாவளி லீவ்… ஆனா அது தமிழ்நாட்டில் இல்லை மக்களே!

இந்த ஆண்டு தீபாவளி வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 20) கொண்டாடப்படவுள்ள நிலையில், சொந்த ஊர் செல்லத் தயாராகும் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் தொடர் விடுமுறை எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.புதுச்சேரி அறிவிப்பு!இந்நிலையில், புதுச்சேரி அரசு கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. புதுச்சேரி அரசுப் பள்ளிகளுக்குக் காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் தீபாவளி விடுமுறையைச் சேர்த்துத் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று (அக். 15, 2025) காலாண்டுத் தேர்வு முடிவடைந்த நிலையில், இன்று (அக். 16) முதல் அக். 21 வரை (7 நாட்கள்) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மீண்டும் அக். 22-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.இதன் மூலம், புதுச்சேரி மாணவர்களுக்குச் சுமார் ஒரு வாரக் காலம் நீண்ட விடுமுறை கிடைத்துள்ளது.தமிழகத்தில் நீடிக்கும் எதிர்பார்ப்பு!கடந்த ஆண்டு தீபாவளி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டபோது, தமிழ்நாடு அரசு தீபாவளி மறுநாள் (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளித்து 4 நாட்கள் தொடர் விடுமுறையை உறுதி செய்தது. இந்த ஆண்டும் தீபாவளி திங்கள்கிழமை வருவதால், செவ்வாய்க்கிழமை (தீபாவளி மறுநாள்) பொது விடுமுறையாக அறிவிக்கப்படுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு தமிழகப் பொதுமக்களிடம் நிலவி வருகிறது. தமிழக அரசும் விரைந்து விடுமுறை குறித்து அறிவிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version