இலங்கை

அர்ச்சுனா எம்பியால் கொதி நிலைக்கு சென்றுள்ள புலம்பெயர் தமிழர்கள்; கடும் எச்சரிக்கை!

Published

on

அர்ச்சுனா எம்பியால் கொதி நிலைக்கு சென்றுள்ள புலம்பெயர் தமிழர்கள்; கடும் எச்சரிக்கை!

  ஜெனிவா சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் – அருச்சுனா அங்கு புலம் பெயர் தமிழகள் தொடர்பில் காணொளி ஒன்று வெளியிட்ட நிலையில் கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அருச்சுனா எம்பி வெளியிட்ட காணொளியில், மிகவும் மோசமாக புலம்பெயர் தமிழர்களை ஏசியதுடன், நீங்கள் எல்லாம் ஆண் பிள்ளைகளா என்றும் , அயல் வீட்டினருக்கு  நன்றி கூறுங்கள் என்றும் மிக கடுமையான வார்த்தை பிரயோகங்களை கூறி காணொளி வெளியிட்டிருந்தார்.

Advertisement

இந்நிலையில் குறித்த காணொளி தொடர்பில் அருச்சுனா எம்பிக்கு , புலம்பெயர் தமிர்ழகள் கடும் எச்சரிக்கையினை  விடுத்துள்ளனர்.

அருச்சுனா எம்பியின் நாகரீகமற்ற வார்த்தை பிரயோகங்கள், மருத்துவர்களுக்கே இழுக்கானது என்றும்,  இழிவு படுத்துவதாகவும்,  சுட்டிக்காட்டி கடும் சினத்துடன் சமூக ஊடகங்களில் புலம்பெயர் தமிழர்கள்   காணொளி வெளியிட்டுள்ளனர்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் மருத்துவராக வந்த அருச்சுனா, இன்று ஓர் எம்பியாக நாடாளுமன்றம் செல்ல காரணமே புலம்பெயர் தமிழர்களின் ஆதரவே என்றும் , புலம்பெயர் தமிழர்கள் அனுப்பிய பணத்தில் ஆடம்பரமாக வாழும் அருச்சுனா எம்பி , புலம்பெயர்  தமிழர்களை  இவ்வாறு  வசைபாடுவது மிகவும் கீழ்த்தரமான செயல் என்றும் சமூகவலைதளவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version