இந்தியா

இந்தியாவின் ஏவுகணை நாயகனின் பிறந்த நாள் இன்று- நினைவு கூறும் முகமாக மோடியின் பதிவு!

Published

on

இந்தியாவின் ஏவுகணை நாயகனின் பிறந்த நாள் இன்று- நினைவு கூறும் முகமாக மோடியின் பதிவு!

இராமேஸ்வரத்தில் வறுமையான  குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியை வகித்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் தலைமை விஞ்ஞானியாக இருந்து ஏவுகணை திட்டங்களை திறம்பட செயற்படுத்தியதால் இந்தியாவின் ஏவுகணை நாயகனாக போற்றப்பட்டார். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனைமுன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டொக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம்” என பதிவிட்டுள்ளார். அவரது பதவில் மேலும் தெரிவித்திருப்பதாவது, “இளைஞர்களை தூண்டி, நம் தேசத்தைப் பெரிய கனவு காணத் தூண்டிய தொலைநோக்கு பார்வையாளராக அவர் நினைவுகூறப்படுகிறார். வெற்றிக்கு பணிவும் கடின உழைப்பும் மிக முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் கனவு கண்ட இந்தியாவை வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை நாம் தொடர்ந்து கட்டியெழுப்புவோம்” என்றும்  பதிவிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version