இலங்கை

இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் விஜேதாசவுக்கு பிணை!

Published

on

இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் விஜேதாசவுக்கு பிணை!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாசவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (16) உத்தரவிட்டுள்ளது.

 2019 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற புனரமைப்பு பணிகளில் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் மற்றும் சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு 1.6 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நிலு தில்ஹார விஜேதாச இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.

Advertisement

கைதுசெய்யப்பட்ட நிலு தில்ஹார விஜேதாச கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version