தொழில்நுட்பம்

ஒன்பிளஸ் – சாம்சங் வரை: ரூ.30,000 பட்ஜெட்டில் கேமரா, பேட்டரியில் மிரட்டும் டாப் 5 போன்கள் லிஸ்ட்!

Published

on

ஒன்பிளஸ் – சாம்சங் வரை: ரூ.30,000 பட்ஜெட்டில் கேமரா, பேட்டரியில் மிரட்டும் டாப் 5 போன்கள் லிஸ்ட்!

ஒளியின் திருவிழாவான தீபாவளி நெருங்கி வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு வசதியாக, சிறந்த செயல்திறன் மற்றும் தரமான கேமரா அம்சங்களுடன் ரூ.30,000-க்குள் இருக்கும் 5 மாடல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஸ்மார்ட்போன்கள் தற்போது பண்டிகைக் காலத் தள்ளுபடியில் கிடைப்பதுடன், வங்கி ஆஃபர்கள், மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆபர்களுடன் (Exchange Deals) இன்னும் மலிவு விலையில் கிடைக்கின்றன. இந்த ஆஃபர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சிறந்த 5 ஸ்மார்ட்போன் டீல்கள் பற்றி பார்ப்போம். 1. ஒன்பிளஸ் நார்டு சி.இ-5 (OnePlus Nord CE 5)விலை: அமேசானில் ரூ.26,999.சிறப்பம்சங்கள்: 6.77 இன்ச் AMOLED திரை (120 Hz புதுப்பிப்பு வீதம்). மீடியாகெட் டைமென்சிட்டி 8350 அபெஸ் ஆஃப். 8GB RAM+256GB  ஸ்டோரேஜ் (1TB வரை விரிவாக்கலாம்). 50MP முதன்மை கேமரா (OIS உடன்), 8MP அல்ட்ராவைடு லென்ஸ். 7100mAh பேட்டரிக்கு 80W வயர்டு சார்ஜிங் ஆதரவு.2. மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro)விலை: ரூ.26,900-க்குக் கிடைக்கிறது.சிறப்பம்சங்கள்: மீடியாடெக் டைமென்சிட்டி 8350 எக்ஸ்டீரிம் ஆஃப் மற்றும் 8GB RAM, 256GB ஸ்டோரேஜ். 6.7 இன்ச் pOLED திரை (120 Hz) மற்றும் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு. 50MP (OIS), 50MP அல்ட்ராவைடு, மற்றும் 10MP டெலிஃபோட்டோ (3x ஆப்டிகல் ஜூம்) கொண்ட டிரிபிள் பின்பக்க கேமரா அமைப்பு. முன்புறம் 50MP செல்பி கேமரா. 6000mAh பேட்டரிக்கு 90W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதி. ஐ.பி-68/69 நீர் மற்றும் தூசி எதிர்ப்புத் திறன் கொண்டது.3. சாம்சங் கேலக்ஸி ஏ55 (Samsung Galaxy A55)விலை: அமேசானில் ரூ.28,999 சிறப்பம்சங்கள்: Exynos 1480 ஆக்டா-கோர் செயலி, உலோகம் மற்றும் கண்ணாடி வடிவம் (IP67 மதிப்பீடு). 6.6 இன்ச் Super AMOLED திரை (120 Hz). 12GB RAM மற்றும் 256GB சேமிப்பு (விரிவாக்கலாம்). 50MP (OIS), 12MP அல்ட்ராவைடு, மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் கொண்ட பின்பக்க கேமரா. 32MP முன்புறக் கேமரா. 5000mAh பேட்டரிக்கு 25W சார்ஜிங் ஆதரவு.4. சி.எம்.எஃப் நத்திங் போன் 2 ப்ரோ (CMF by Nothing Phone 2 Pro)விலை: பிளிப்கார்ட்டில் 128GB வேரியண்ட் ரூ.16,999.சிறப்பம்சங்கள்: MediaTek Dimensity 7300 Pro செயலி. 6.77 இன்ச் AMOLED திரை (120 Hz). 8GB RAM. 50MP வைடு, 50MP டெலிஃபோட்டோ (2x ஜூம்), மற்றும் 8MP அல்ட்ராவைடு சென்சார் கொண்ட டிரிபிள் பின்பக்க கேமரா. 16MP முன்புறக் கேமரா. 5000mAh பேட்டரிக்கு 33W கம்பி வழி சார்ஜிங். IP54 நீர் மற்றும் தூசி எதிர்ப்புத் திறன் கொண்டது.5. போகோ (Poco F7)விலை: பிளிப்கார்ட்டில் ரூ.30,999. சிறப்பம்சங்கள்: கேமர்களுக்கு ஏற்ற ஸ்னாப்டிராகன் 8s Gen 4 ஆப். 6.83 இன்ச் AMOLED திரை (1.5K தெளிவுத்திறன், 120 Hz). 12GB RAM மற்றும் 256GB வரை சேமிப்பு. 50MP முதன்மை சென்சார் (OIS உடன்) மற்றும் 8MP அல்ட்ராவைடு லென்ஸ். 7550mAh பேட்டரிக்கு 90W வயர்டு சார்ஜிங். ஐ.பி-68 நீர் மற்றும் தூசி எதிர்ப்புத் திறன் கொண்டது. இந்த ஆபரை பயன்படுத்தி, இந்தத் தீபாவளிக்கு தரமான கேமரா மற்றும் செயல்திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போனை மலிவு விலையில் பெறலாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version