இலங்கை

காணியை விட்டு வெளியேறிய பொலிஸார்!

Published

on

காணியை விட்டு வெளியேறிய பொலிஸார்!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி யாழ்.நீதிமன்றின் பதிவாளர் முன்நிலையில், அதன் உரிமையாளர்களிடம் இன்று கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையம், கடந்த 30 வருடங்களாக பொலிஸாரின்  கட்டுப்பாட்டில்  இருந்து வந்தது. அந்த காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் மீள கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், அதற்கு பலன்கிட்டவில்லை.

Advertisement

அந்த  நிலையில், 2019ஆம் ஆண்டு, காணிகளுக்கு சொந்தமான 07 உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த யூன் மாதம் 27ஆம் திகதி  தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன் போது பொது மக்களின் காணியிலிருந்து வெளியேறி, அந்த காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார். எனினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பொலிஸார் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவில்லை.

இந்த நிலையில், இன்றையதினம் புதன்கிழமை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்ற பதிவாளர் கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு வருகைதந்து, அங்குள்ள பொலிஸாரை வெளியேற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளித்தனர். காணியின் உரிமையாளர்கள் தமக்கு காணி இல்லை என வேறு இடத்தில் நீண்ட காலமாக வசித்து வந்த நிலையில் இன்றைய தினம் காணி கையளிக்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.

தற்போது கோப்பாய் பொலிஸ் நிலையம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் தனித்து இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டும்  வருகின்றன.

Advertisement

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version