இந்தியா
குஜராத் பா.ஜ.க.வில் மாற்றம்: முதல்வர் பூபேந்திர படேல் தவிர 16 அமைச்சர்களும் ராஜினாமா
குஜராத் பா.ஜ.க.வில் மாற்றம்: முதல்வர் பூபேந்திர படேல் தவிர 16 அமைச்சர்களும் ராஜினாமா
குஜராத்தில் திட்டமிடப்பட்டுள்ள அமைச்சரவை விரிவாக்கத்திற்கு ஒரு நாள் முன்னதாக, முதலமைச்சர் பூபேந்திர படேலைத் தவிர்த்து மற்ற 16 அமைச்சர்களும் இன்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் என்று பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.முதலமைச்சர் பூபேந்திர படேல் வெள்ளிக்கிழமை அன்று தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்வார் என்று மாநில அரசு இன்று காலை அறிவித்திருந்தது. அனைத்து 16 அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களும் கட்சியால் பெறப்பட்டுள்ளன. முதலமைச்சர் படேலைத் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர் என்று பா.ஜ.க. வட்டாரம் ஒன்று உறுதிப்படுத்தியது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த அமைச்சரவை விரிவாக்கம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11:30 மணிக்கு நடைபெறும்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கநாளை காலை 11.30 மணியளவில் காந்திநகரில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, குஜராத் ஆளுநர் ஆச்சாரிய தேவவரத் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.தற்போது, குஜராத் மாநில அமைச்சரவையில் முதலமைச்சர் படேல் உட்பட மொத்தம் 17 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 8 பேர் கேபினட் தகுதி கொண்ட அமைச்சர்கள், மற்றவர்கள் இணை அமைச்சர்களாக (MoS) உள்ளனர். 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தில், அதிகபட்சமாகச் சட்டமன்ற பலத்தில் 15% என்ற கணக்கில், 27 அமைச்சர்கள் வரை இருக்கலாம்.முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீலுக்குப் பதிலாக, மாநில இணை அமைச்சர் ஜகதீஷ் விஸ்வகர்மா மாநில பா.ஜ.க. பிரிவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றார். பூபேந்திர படேல், டிச.12, 2022 அன்று இரண்டாவது முறையாக குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.