இலங்கை

கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி குழு

Published

on

கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி குழு

கணேமுல்ல சஞ்சீவ கொசை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி உட்பட்ட குழு  நேபாளத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர்கள் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 182 ரக விமானத்தின் ஊடாக காத்மண்டுவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று மாலை அழைத்துவரப்பட்டுள்ளனர்.

Advertisement

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ கொசை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாள நாட்டில் நேற்று கைது செய்யப்பட்டார்.

இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணப் பெண்ணின் பெயரில் போலியான கடவுச்சீட்டைத் தயாரித்து ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படை அதிகாரிகள் நேபாளம் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version