பொழுதுபோக்கு

சிவகாசி விஜய்க்கு தங்கை, இப்போ இவர் பெரிய டான்சர்: 3 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தவர்!

Published

on

சிவகாசி விஜய்க்கு தங்கை, இப்போ இவர் பெரிய டான்சர்: 3 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தவர்!

விஜய் அசின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் சிவகாசி. இந்த படத்தில் விஜய், அசின், பிரகாஷ் கேரக்டருக்கு அடுத்து ரசிகர்கள் மத்தியின் இன்னும் நீங்காத இடம் பிடித்துள்ளவர் அந்த படத்தில் விஜயின் தங்கையாக நடித்த நடிகை தான். இந்த நடிகை இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?தமிழ் சினிமாவில் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பேரரசு. இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், இதே கூட்டணி அடுத்து இணைந்த படம் தான் சிவகாசி. காமெடி, காதல், அம்மா செண்டிமெண்ட், ஆக்ஷன் என கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த இந்த படம் தீபாவளி பண்டிக்கு வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. படத்தில் விஜய் – பிரகாஷ்ராஜ் இருவரும் சகோதரர்களாக நடித்திருந்தனர்.A post shared by Krishna Sajith (@iam.krishnasajith)அசின், சரண்யா, கீதா, எம்.எஸ்.பாஸ்கர், ராஜேஷ், வெங்கட் பிரபு, வையாபுரி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் தனது அண்ணனிடம் இருந்து சொத்துக்களை வாங்கி தங்கைக்கு கொடுக்க முயற்சிக்கும் அண்ணனாக நடித்திருந்தார். விஜய் அவரது தங்கை வைரம் கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை லக்ஷனா. இதுதான் அவர் தமிழில் அறிமுகமான முதல் திரைப்படம்.கடந்த 2001-ம் ஆண்டு மலையாளத்தில் ஜெயராம் நடிப்பில் வெளியான வக்கலாத்து நாராயணன்குட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான லக்ஷனா, அடுத்து பஹத் பாசில் அறிமுகமாக கையேதும் தூரத்து என்ற படததில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். அடுத்து மோகன்லால் மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்த இவர், தமிழில் சிவகாசி படத்தை தொடர்ந்து, எஸ்.ஜே.சூர்யாவின் திருமகன், பொன்வண்ணன் இயக்கிய கோமதி நாயகம், தரகு, அய்யா வழி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.A post shared by Krishna Sajith (@iam.krishnasajith)கடைசியாக, தமிழில் கடந்த 2013-ம் ஆண்டு கவசம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகிய லக்ஷனா, தற்போது நடனத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் இவ்வப்போது நடனம் ஆடுவது போன்ற வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். விஜய்க்கு தங்கையாக நடித்திருந்த இவர் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதன் மூலம் 3 சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்தவர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version