பொழுதுபோக்கு

தமிழில் ரீ-என்டரி, 55 வயதில் அசத்தல் ஃபிட்னஸ்: பிரபல நடிகைக்கு தங்கை, இவர் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

Published

on

தமிழில் ரீ-என்டரி, 55 வயதில் அசத்தல் ஃபிட்னஸ்: பிரபல நடிகைக்கு தங்கை, இவர் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

ராமராஜன் நடிப்பில் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் இன்றுவரை யாரும் மறக்க முடியாத ஒரு பாடலாக இருக்கிறது. இந்த பாடலில் நடித்த நடிகை யார் தெரியுமா? அவர் பிரபல நடிகையின் தங்கை, 33 ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்தமிழ் சினிமாவில், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை பானுப்பிரியாவின் தங்கை தான் சாந்தி பிரியா. 1987-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து, ஒன்று எங்கள் சாதியே, நேரம் நல்லாருக்கு என ராமராஜனுடன் ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார்.அதன்பிறகு, ரயிலுக்கு நேரமாச்சு, கைநாட்டு, பூவிழி ராஜா, சிறையில் பூத்த சின்ன மலர், உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார் கடைசியாக கடந்த 1992-ம் ஆண்டு உயர்ந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார், இடையில், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்திருந்த சாந்தி பிரியா, 1994-ம இக்கி பி இக்கா என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு சினிமாவில் நடிக்காத இவர் தற்போது 33 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்டரி கொடுத்தார்.வெற்றிமாறன் இயக்கத்தில் பேட் கேர்ள் என்ற படத்தில் தான் சாந்தி பிரியா ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட் கேர்ள்’ படமத், தனித்துவமான கதைக்களம் மற்றும் துணிச்சலான செயல்களுக்காக ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஆந்திராவை சேர்ந்த சாந்திபிரியா, 50 வயதை கடந்தாலும் இன்னும் ஃபிட்டாக இருந்து பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். தனது ஃபிட்டனஸ்க்கு காரணம் என்ன என்பது குறித்து அவரே ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.வீட்டிலேயே ஜிம் வைத்திருக்கிறேன். வீட்டிலேயே சைக்ளிங் பயிற்சி அதிகமாக செய்கிறேன். மும்பை வீட்டிலும், சென்னை வீட்டிலும் கட்டாயம் சைக்கிளிங் செய்யும் மிஷின் இருக்கிறது. அதேபோல் 3 மாதத்திற்கு ஒரு முறை ஃபிட்னஸ் பயிற்சிகளை மாற்றிக்கொண்டே இருப்பேன். அதேபோல், யோகா, நீச்சல், ஸூம்பா என பல உடற்பயிற்சிகளை செய்துகொண்டே இருப்பேன். இதில் எதை மாற்றினாலும் நடைப்பயிற்சியை கட்டாயம் தினமும் செய்துவிடுவேன். உடற்பயிற்சிகளை செய்ய தவறினாலும் அந்த நாளில் கட்டாயம் நடைப்பயிற்சியாவது செய்துவிடுவேன் என்னுடைய ஃபிட்னஸ் ரொட்டீன்தான் தன் இளமைக்கும், உறுதியான, சுறுசுறுப்பான ஆற்றலுக்கும் காரணம் என்று சாந்தி பிரியா கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version