இலங்கை

திசைகாட்டி அரசாங்கத்தால் இலங்கையில் முன்னேற்றம்; பிரான்ஸ் தூதுவர் பாராட்டு!

Published

on

திசைகாட்டி அரசாங்கத்தால் இலங்கையில் முன்னேற்றம்; பிரான்ஸ் தூதுவர் பாராட்டு!

திசைகாட்டி அரசாங்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி, ஒரு வருடம் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தேர்தலுக்குப் பின்னர் வன்முறைகள் நிலவாமை மகிழ்ச்சி தருகின்றது என்று பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் தெரிவித்தார்.

பிரான்ஸ் தூதுவர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கட்சியின் தலைமை அலுவலத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. சந்திப்பில், ஜனாதிபதி அநுரகுமாரதிஸாநாயக்கவை முதன்மையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களுக்கு தூதுவர் வாழ்த்துத் தெரிவித்தார். குறிப்பாக ஊழல் மோசடித் தடுப்பு மற்றும் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பல் நடவடிக்கைகளுக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.

Advertisement

பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், கடல் வளத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு தாம் உதவத்தயார் என்றும் தெரிவித்தார். அதேவேளை பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளில் பிரான்ஸின் முதல்வரிசை முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு சந்திப்பில் உடன்பாடு எட்டப்பட்டது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version