இலங்கை
தொடர்ந்து முன்றாவது நாளாகவும் ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்!
தொடர்ந்து முன்றாவது நாளாகவும் ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்!
இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் இன்றும் வடமாகாண ஆளுநர் செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
வடமாகாண கல்வி திணைக்களத்தினால் ‘சேவையின் தேவை கருதி’ என மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும் பழிவாங்கல் நோக்கமாக கருதும் நிலையில் குறித்த இடமாற்றத்தை உடன் இடைநிறுத்தி மீள மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், தற்போது உள்ள ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் பாகுபாடு மற்றும் பழிவாங்கல் காணப்படுவதுடன்,
தற்போதுள்ள அரசாங்கத்தின் கீழ் சில அதிகாரிகள் அவர்களின் சுயலாபத்துக்காக செயற்பட்டு வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை