இலங்கை
நேபாளத்தில் இருந்து நேற்று நாடுகடத்தப்பட்டார் செவ்வந்தி
நேபாளத்தில் இருந்து நேற்று நாடுகடத்தப்பட்டார் செவ்வந்தி
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஆறு பேரும், நேற்று மாலை நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கொழும்பு அளுத்கடை நீதிமன்றத்துக்குள் பாதாளக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்ஜீவ சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக இஷாரா செவ்வந்தி கருதப்படுகின்றார். அவரும், அவர் சார்ந்த குழுவினரும் நேபாளத்தில் வைத்து நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் நேற்று மாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அனைவரையும் பொறுப்பெடுத்துள்ளது.