இலங்கை
பிளாஸ்ரிக் போத்தல்கள் வழங்கினால் பணம்; ‘சேவ் ஏ லைவ்’ நிறுவனம் முன்மாதிரி!
பிளாஸ்ரிக் போத்தல்கள் வழங்கினால் பணம்; ‘சேவ் ஏ லைவ்’ நிறுவனம் முன்மாதிரி!
யாழ்ப்பாணத்தைப் பிளாஸ்ரிக் கழிவுகள் அற்ற நகரமாக மாற்றும் நோக்கில் வெற்றுப் பிளாஸ்ரிக் போத்தல்களுக்குப் பணம் வழங்க ‘சேவ் ஏலைவ்’ நிறுவனத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கமைய. 460, நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ‘சேவ் ஏ லைவ்’ நிறுவனத்தின் சேகரிப்பு மையத்துக்குக் கொண்டு வரப்படும் ஒரு வெற்று பிளாஸ்ரிக் போத்தலுக்குத் தலா ஒரு ரூபா வீதம் வழங்கப்படும். மேலதிகத் தகவல்களுக்கு 0779443577 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் ‘சேவ் ஏலைவ் நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.