இந்தியா
புதுச்சேரியில் கொந்தளிப்பு: நீதிபதியை இழிவுபடுத்திய பா.ஜ.க-வை கண்டித்து வி.சி.க-வினர் ஆர்ப்பாட்டம்!
புதுச்சேரியில் கொந்தளிப்பு: நீதிபதியை இழிவுபடுத்திய பா.ஜ.க-வை கண்டித்து வி.சி.க-வினர் ஆர்ப்பாட்டம்!
புதுச்சேரி: உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாயை இழிவுபடுத்தும் விதமாக அவதூறு கருத்துகளைத் திட்டமிட்டுப் பரப்பி வரும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைத் தாக்கிய காவல்துறையினரைக் கண்டித்தும், புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சட்டமன்றம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசிக மாநிலச் செயலாளர் பாவாணன் தலைமை தாங்கினார்.இந்தக் ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்ற நீதிபதியைக் குறிவைத்து அவதூறு பரப்பும் பாஜகவினருக்கு எதிராகவும், மாணவர்களைத் தாக்கிய காவல்துறையினருக்கு எதிராகவும் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.செய்தியாளர்: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி.