இந்தியா
புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தின் குடிநீர் கேனில் பூச்சி: பழைய கேன்களைப் பயன்படுத்துவதாகப் புகார்
புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தின் குடிநீர் கேனில் பூச்சி: பழைய கேன்களைப் பயன்படுத்துவதாகப் புகார்
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்தில் இயங்கி வரும் ஐடியல் வாட்டர் புராடக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தால் ‘கார்க்டிக்’ (CARCTIK) என்ற பெயரில் தண்ணீர் நிரப்பி சீலிடப்பட்ட வாட்டர் கேன்கள் மற்றும் பாட்டில்கள் விழுப்புரம் மாவட்டம், அருகிலுள்ள புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் விநியோகிக்கப்படுகிறது. புதுச்சேரியில் புதன்கிழமை விற்பனை செய்யப்பட்ட குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் வாட்டர் கேனுக்குள் தண்ணீரில் பூச்சி ஒன்று மிதந்துள்ளது. அதை வாங்கிய வாங்கிய வாடிக்கையாளர், தண்ணீர் கேன் சப்ளை செய்த ஏஜென்சிக்கு புகார் தெரிவித்துள்ளார்.அவர்கள் சரியான பதில் அளிக்காததால், குறிப்பிட்ட நிறுவனத்தின் சம்பந்தப்பட்டவர்களை தொலைபேசியில் அழைத்து புகார் தெரிவித்தபொழுது மிக அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். ஏற்கனவே, பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்த தகவல் படி இத்தகைய தண்ணீர் கேன்கள் அதிகபட்சம் 30 முறையோ அல்லது குறிப்பிட்ட கால இடைவேளைக்குப் பிறகோ பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், மேற்கூறிய கம்பெனியில் இரண்டு மூன்று ஆண்டுகள் பழைய கேன்களை பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.புகைப்படம் மற்றும் வீடியோவில் உள்ள அந்த குறிப்பிட்ட கேன் ஒன்றே அதற்கு சாட்சி. வானூர் வட்டத்தில் பல இடங்களில் இப்படி தண்ணீர் கேன் மற்றும் பாட்டில் தயாரிப்பு நடைபெறுகிறது. அத்தகைய இடங்களில் எல்லாம் உணவு பாதுகாப்பு துறை மூலம் சோதனைகள் நடத்தி விதிமுறை மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி