இலங்கை
புத்தளம் முள்ளிபுரம் பிரதேசத்தின் அபிவிருத்தி ஆரம்பம்….
புத்தளம் முள்ளிபுரம் பிரதேசத்தின் அபிவிருத்தி ஆரம்பம்….
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தொகுதி அமைப்பாளரும்,புத்தளம் மாநகர சபை உறுப்பினறுமான கௌரவ Ranees Badurdeen அவர்களின் மேற்பார்வையின் கீழ், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் நில்பான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், புத்தளம் பிரதேச சபைக்குட்பட்ட முள்ளிபுரம் பிரதேத்தின் (லிவர்பூல் உதைப்பந்தாட்ட கழகத்தின் மைதானத்திற்கு முன்னாள் செல்லும் வீதி) கொங்கிரீட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்காக, நேற்று மாலை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுமார் பத்து லட்சம் ரூபா செலவில் குறித்த பாதை கங்கிரீட் பாதையாக புணரமைப்பு செய்யப்பட உள்ளது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினராக சகோதரர் நில்பான் அவர்கள் பதவியேற்ற பின் அவரது முதல் கொங்கிரீட் பாதையாக இந்த காங்கிரீட் பாதை அபிவிருத்தி பணி ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் இன்னும் இது போன்று பல பாதைகள்,வடிகான்கள் உட்பட இன்னும் பல சேவைகளோடு முள்ளிபுரம் அபிவிருத்தி செய்யப்பட்ட இருக்கின்றது என்பதையும் அறியத்தருகின்றோம்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை