இலங்கை

பேக்கரி பொருள் போன்று விற்கப்பட்ட போதைப்பொருள் -சந்தேகநபர் கைது!

Published

on

பேக்கரி பொருள் போன்று விற்கப்பட்ட போதைப்பொருள் -சந்தேகநபர் கைது!

பேக்கரி பொருள் பனை என்ற போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதக போதைப்பொருளை விற்பனை செய்ததாக கூறப்படும்  56 வயதுடைய சந்தேக நபர், நோர்ட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் இன்று 16ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

லொறியொன்றில் பேக்கரி பொருள் விற்பனை என்ற போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய நோட்டன் பிரிட்ஜ் ஊடாக குறித்த லொறி ஹட்டன் நோக்கி  பயணித்துக்கொண்டிருக்கையில் அதனை வழிமறித்துபொலிஸார்  பரிசோதனைக்குட்படுத்தினர்.

Advertisement

இதன்போது லொறிக்குள் இருந்து 250 மதனமோதக உருண்டைகள் கைப்பற்றப்பட்டன. அதனையடுத்து சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார் அவரை  நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version