இலங்கை
மாகாணத் தேர்தல் அறிவிப்பை துணிவிருந்தால் வெளியிடுங்கள்;
மாகாணத் தேர்தல் அறிவிப்பை துணிவிருந்தால் வெளியிடுங்கள்;
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் முழக்கம்
அநுர அரசாங்கத்துக்குத் துணிவிருந்தால், மாகாணசபைத் தேர்தல் தொடர்பான உறுதியான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கண்டிக்கு நேற்றுச் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்றார். அதன்பின்னர் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்தை வீழ்த்துவது உறுதி. அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றேன். எமது எழுச்சியால் ஏற்பட்ட அச்சம் காரணமாகவே, அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலைத் தாமதப்படுத்தி வருகின்றது.
தேர்தல் நடத்தப்படும் என்றும், தேர்தலை நடத்துவதில் உறுதியாக உள்ளதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது. அப்படியானால், தேர்தல் திகதியை அறிவிக்குமாறு அரசாங்கத்தைக் கோருகின்றேன். எந்தவொரு பலப்பரீட்சைக்கும் நாங்கள் தயார்-என்றார்.