இலங்கை

மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள அவசரமாக ஒன்று கூடிய தமிழ்க் கட்சிகள்!

Published

on

மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள அவசரமாக ஒன்று கூடிய தமிழ்க் கட்சிகள்!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் நேற்று ஈடுபட்டிருந்தன. 

 குறித்த தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து போட்டியிட்டு வடமாகாணத்தை எவ்வாறு கைப்பற்றுவது என்பது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடிள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

 குறித்த கலந்துரையாடலுக்கு வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமை தாங்கியிருந்தார்.

குறித்த சந்திப்பில், சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

Advertisement

 குறிப்பாக அடுத்த வருடமளவில் வடமாகாண சபை தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக அரசாங்கம் கூறியுள்ள நிலையில் அது தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாடு எவ்வாறு காணப்படுகின்றது என்பது தொடர்பிலும் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் தீர்க்கமாக ஆராயப்பட்டிருந்தன.

 இந்த கூட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் M.A சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் இன்று குறித்த சந்திப்பிற்கு சமூகமளித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version