இலங்கை

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது உறுதி; லால் காந்த

Published

on

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது உறுதி; லால் காந்த

2026 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிமொழியை அமைச்சர் லால் காந்த மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், பழைய முறையின் கீழ் அல்லது புதிய தேர்தல் முறைமை சட்டமாக்கப்பட்டு பின்னர், மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முன்னைய யோசனையை திருத்திய பின்னர் அரசாங்கம் பழைய முறையின் கீழ் தேர்தலை நடத்த முடியும் என்று லால் காந்த ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உள்ளது.

எனவே, பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி அரசாங்கத்திற்கு சவாலாக இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எதிர்க்கட்சி கூட்டணி ஒருபோதும் அரசாங்கத்திற்கு ஒரு பிரச்சினையாகவோ அல்லது சவாலாகவோ இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version