பொழுதுபோக்கு
மொழிபெயர்ப்பாளர் ராக்டு… பிரதீப் ஷாக்டு; ‘டியூட்’ ப்ரொமோஷன் நிகழ்வில் கலகல!
மொழிபெயர்ப்பாளர் ராக்டு… பிரதீப் ஷாக்டு; ‘டியூட்’ ப்ரொமோஷன் நிகழ்வில் கலகல!
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘லவ் டுடே’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இப்படத்தில் பிரதீப் இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் கலக்கியிருந்தார்.ஒரு யுவக்களுக்கே உரித்தான காதல் மற்றும் நகைச்சுவை படமாக இது இருந்தது. ஒரு படத்தை இயக்கி அடுத்த படத்தில் நடிகராக அறிமுகமாகி அந்த இரண்டு படங்களையும் மெகா ஹிட்டாக்குவது என்பது குறைவானவர்களுக்கே சாத்தியமான ஒரு சாதனை. இதுவரை எந்தக் கோலிவுட் ஹீரோவுக்கும் இது சாத்தியமாகாத ஒன்றாக இருந்த நிலையில், பிரதீப் அதனை எளிதாக கடந்துவிட்டார்.‘லவ் டுடே’ படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் நடித்த அடுத்த படம் ‘டிராகன்’. இந்தப் படத்தை ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் இயக்குநராக அறியப்படும் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். 2025-ம் ஆண்டு வெளியான ‘டிராகன்’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் பிரதீப் ரங்கநாதன், கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ படத்திலும் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள ‘டியூட்’ படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தீபாவளி ரேஸில் ‘டியூட்’ வெற்றி பெருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ‘டியூட்’ ப்ரொமோஷனின் போது மொழி பெயர்ப்பாளர் செய்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ‘டியூட்’ படக்குழுவினர் ஹைதராபாத்திற்கு பட ப்ரொமோஷனுக்காக சென்றுள்ளனர். அப்போது நடிகர் பிரதீப் ரங்கநாதன், ஹைத்ராபாத் எனக்கு இன்னொரு குடும்பம் மாதிரி. ‘லவ் டுடே’, ‘டிராகன்’ பாத்திருப்பீர்கள் நீங்கள் கொடுத்த வரவேற்பிற்கு ரொம்ப நன்றி. உங்கள் குடும்பத்தில் என்னை ஒரு நபராக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. ‘லவ் டுடே’, ‘டிராகன்’ பிடித்திருந்தால் ‘டியூட்’ படமும் உங்களுக்கு பிடிக்கும் ‘டியூட்’ ரொம்ப நல்ல படம்” என்றார்.பிரதீப்பை மிஞ்சிய மொழிபெயர்ப்பாளர்… ‘Dude’ தெலுங்கு விழாவில் சுவாரஸ்யம்!#Dude | #PradeepRanganathan | #VikatanReels | #CinemaVikatanpic.twitter.com/ia9644zxRXஇதனை மொழி பெயர்த்துக் கொண்டிருந்த மொழி பெயர்ப்பாளர் ’டியூட்’ திரைப்படம் மற்ற சினிமா மாதிரி இல்லை திரையரங்கை அதிர வைக்கும் சினிமா, காமெடிக்கு காமெடி, எண்டரெயின்மெண்டுக்கு, எண்டர்டெயிமெண்ட் என அனைத்தும் இந்த படத்தில் இருக்கும். ‘டியூட்’ பிளாக்பஸ்டர் ஹிட்டடிக்கும் படம் என்றார். இதை கேட்டு அதிர்ச்சியான பிரதீப் ரங்கநாதன், நல்ல படம் இரண்டு வார்த்தைகள் தான் என்றார். அதற்கு மொழிப்பெயர்ப்பாளர் தமிழில் இரண்டு வார்த்தைகள் தான் ஆனால் தெலுங்கில் அது பெரிய வார்த்தை என்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.